மத்திய அரசு பணிகளில் சேர்வதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வுகள் இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில் பிராந்திய மொழிகளிலும் தேர்வு நடத்த வேண்டும் என பல மாநிலங்களில் கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எஸ் எஸ் சி, எம் டி எஸ் மற்றும் சிஎச்எஸ்எல் ஆகிய தேர்வுகளை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் நடத்துவதற்கு பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் இனி ஆங்கிலம் மற்றும் இந்தி தவிர பிராந்திய மொழிகளான 13 மொழிகளில் தயாரிக்கப்படும். இதனால் மத்திய அரசு பணிகளில் சமவாய்ப்பு கிடைக்கும். மேலும் பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் கற்றல் செயல்பாட்டில் அவரவர் தாய்மொழியை பயன்படுத்த ஊக்குவித்தல் போன்ற முன் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என UGC தலைவர் ஜெகதீஷ் குமார் துணைவேந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.