நாடு முழுவதும் ஏராளமான வங்கிகள் அமைந்துள்ளது ரிசர்வ் வங்கிக்கு பொது மற்றும் தனியார் வங்கிகளுக்கு இந்தியா முழுவதும் பொருந்தும் வகையில் Instruments Act, Real-Time Gross Settlement விடுமுறை மற்றும் வங்கி கணக்கு முதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அனைத்து வங்கி விடுமுறை நாட்களை நிர்ணயம் செய்யும் அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில் வருகிற செப்டம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறைகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. வெவ்வேறு மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள பிராந்திய மற்றும் குறிப்பிட்ட மாநிலங்களுக்கான விடுமுறைகள் மாதாந்திர இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை அனைத்து ஞாயிற்றுக்கிழமை என மொத்தம் 12 வேலை இல்லாத நாட்களை இந்த விடுமுறைகள் உள்ளடக்கியுள்ளது.
செப்டம்பர் மாதம் வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல் இதோ:
செப்டம்பர் 5- ஸ்ரீமந்த சங்கர் தேவா மற்றும் ஹர்தாலிக் தீஜ் திதி அதான் சத்தீஸ்கர் சிக்கிம் மாநிலங்களுக்கு விடுமுறை
செப்டம்பர் 7- விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இருக்கும் வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 8- ஞாயிறு மற்றும் நுகாய். ஒடிசா வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 13-தேஜா தசமி. ராஜஸ்தான் மாநில வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 14- இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஓணம். நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை- திருஓணம் கேரள மாநில வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 16- மிலாடி நபி. நாடு முழுதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
செப்டம்பர் 17- இந்திர ஜாத்ரா சிக்கிம் மாநில வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 18- ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி கேரளா மாநில வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 23-மாவீரர் தியாகர் தினம். ஹரியானா மாநில வங்கிகளுக்கு விடுமுறை.
செப்டம்பர் 28- நான்காவது சனிக்கிழமை. நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.