இந்திய ரயில்வே பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலுடன் சீக்கியர்களுக்கென குரு கிரிப யாத்ராவை வருகிற ஏப்ரல் மாதம்  தொடங்குகிறது. வட இந்தியாவில் இந்த பண்டிகை பைசாகி மாதமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு துறைகளுடன் ஆலோசனைக்குப் பின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனித தலங்களுக்கு இந்த ரயில்வே சிறப்பான சுற்றுலாவை முன்னெடுத்துள்ளது. வருகிற ஏப்ரல் 5, 2023 அன்று லக்னோவில் தொடங்கி ஏப்ரல் 15, 2023 அன்று இந்த சுற்றுலா முடிவடைகிறது. இந்த புனித பயணத்தின் போது 5 புனித குருவாராக்கள் உட்பட மிகவும் பிரபலமான ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

அந்த வகையில் அனந்தபூர் சாஹிப்பில் உள்ள ஸ்ரீ கேஸ்கர் சாஹிப் குருத்வாரா & விராசத் -இ- கல்சா, சிர்ஹிந்தில் உள்ள குருத்வாரா ஸ்ரீ பதேகர் ஷாகிப், கிராத்பூர் சாஹிப்பில் உள்ள குருத் வாரா ஸ்ரீ பாதல்புரி சாஹிப், ஸ்ரீ அகல் தக்த் சாஹிப் மற்றும் ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப், ஸ்ரீ அகல் தக்த் சாஹிப்பில் உள்ள ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப், ஸ்ரீ அமிர்த்ஸ் சாஹிப் நான்டெட்டில் உள்ள ஸ்ரீ ஹஸூர் சாஹிப், பிதாவில் உள்ள குருத்வாரா ஸ்ரீ குருநானக் ஜிரா சாஹிப் மற்றும் பாட்னாவில் உள்ள குருத்வாரா ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் போன்ற புனித தல பயணங்களை இந்த சுற்றுலா உள்ளடக்கியுள்ளது. இதற்காக 9 ஸ்லீப்பர் கோச், மூன்றாம் வகுப்பு ஏசி -1, இரண்டாம் வகுப்பு ஏசி -1 போன்றவற்றை கொண்ட ரயிலை ஐஆர்சிடிசி இயக்குகிறது.

இந்த ரயில் பயணத்தில் பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் விதமாக போக்குவரத்து வசதிகள், தங்குமிடம், உணவு, பயண காப்பீடு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை சுற்றுலாக் கொண்டிருக்கிறது. மேலும் லாங்கர்கள் எனப்படும் முக்கிய குருவாராக்களில் உள்ள சமுதாய சமையலறைகளில் பங்கேற்கவும் விருப்பத்தேர்வு வழங்கப்படுகிறது. ஐ.ஆர்.சி.டி.சி பயணிகளை ஈர்ப்பதற்காக மலிவான கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதே போல் செழுமையான மத மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் வழியில் இந்த ஆன்மீக பயணத்தில் இணைய சீக்கியர்களை வரவேற்க இந்திய ரயில்வே தயாராக இருக்கிறது.