தலைநகர் டெல்லியில் ஓலா, ஊபர், ரேபிடோ பைக் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசின் விதிமுறைகளை மீறிய குற்றசாட்டிற்காக ஒரே நேரத்தில் 3 பெரிய நிறுவனங்களின் பைக் சேவைகளை டெல்லி அரசு நிறுத்துவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பைக்கில் பயணிகளை ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்படும்.

முதல் முறை குற்றம் செய்தால் 5000 அபராதமும் அடுத்ததாக குற்றம் செய்தால் 10,000 அபராதமும் விதிக்கப்படும். ஒருவேளை தொடர்ந்து குற்ற செயல்களில் 2 முதல் 3 ஆண்டுகள் வரை அபராதமும் விதிக்கப்படும். பைக் மற்றும் ஸ்கூட்டரில் பயணிகளை ஏற்றி செல்வது மோட்டார் வாகன சட்டப்படி குற்ற செயல் என்பதால் ஓலா, ஊபர், ரேபிடோ பைக் நிறுவனங்களுக்கு டெல்லி அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு ஒரு லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என கூறியுள்ளது.

அதோடு பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்ட ஓட்டுனருக்கு 3 மாதங்கள் வரை ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். ஏற்கனவே மகாராஷ்டிராவில் பைக் சேவைக்கு அம் மாநில அரசு தடை விதித்த நிலையில் தற்போது டெல்லியில் ஒரே நேரத்தில் 3 பெரிய நிறுவனங்களின் பைக் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டெல்லியை தொடர்ந்து இனி பிற மாநிலங்களிலும் பைக் சேவைகளுக்கு தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.