பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ரேஷ்மா விலகுவதாக பேசப்பட்டு வருகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மக்களிடையே மிகவும் பாப்புலரான தொடர் பாக்கியலட்சுமி. இதில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிஃபருக்கு பதிலாக ரேஷ்மா என்பவர் என்ட்ரி கொடுத்தார். தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு செட்டாகி நடித்து வருகின்ற நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய தொடர் ஒன்றில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

இதன் காரணமாக பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகுவதாக தகவல் வெளிவர ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் ரேஷ்மா பாக்கியலட்சுமி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து நட்பு, கதை, படபிடிப்பு நாங்கள் ஒன்றாக செலவழிக்கும் அழகான கடினமான நாட்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும். நாம் அனைவரும் விழித்தெழுந்து ஒரு நல்ல நாளை பார்க்கவே விரும்புகின்றோம். மறக்க முடியாததாக இருக்கும் என பதிவிட்டு இருக்கின்றார்.