
கேரள மாநிலத்திலுள்ள கோட்டயம் மாவட்டத்தில், எருமேலி நகரில் தர்ம சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இது சபரிமலை யாத்ரீகர்களின் முக்கியமான பயணச் சந்திப்பு இடமாகும். இந்த கோவிலில் குங்குமம், சந்தனம் வாங்குவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த நிலையில் தற்போது திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேரளா ஐகோர்ட்டில் தெரிவித்ததாவது, எருமேலியில் உள்ள தர்மசாஸ்தா கோவிலில் சந்தனம், குங்குமம் வாங்குவதற்கு பக்தர்களுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவித்தது.
இந்த வழக்கின் போது கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவின் படி, பேட்டை துள்ளலுக்கு அடுத்து சந்தனம், குங்குமம் இனி கட்டணமில்லாமல் வழங்கப்படும் எனவும், குத்தகைக்கு எடுத்தவர்கள் பக்தர்களை எந்தவித தொந்தரவும் செய்யக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை அடுத்த தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.