திமுக கட்சியின் ஐடி விங் பிரிவில் இணைச் செயலாளராக பதவி வகிப்பவர் டாக்டர் மகேந்திரன். இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் செயல்பட்ட நிலையில் சட்டசபை தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்ததால் திமுக கட்சிக்கு தாவினார். இந்நிலையில் டாக்டர் மகேந்திரன் அவருடைய மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள twitter பதிவு தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.

அந்த பதிவில் தன்னலம் இல்லாமல் செயல்படும் உங்களுக்கு நான் எப்போதும் நன்றி உடையவனாக இருப்பேன். நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவு மற்றும் அத்தகைய கடுமையான நாட்களை வெற்றிகரமாக கடக்க உதவியது. நீங்கள் இல்லை என்றால் அது நிச்சயம் சாத்தியமாகாது. இந்த பிறந்தநாளில் உங்களிடம் ஒரு உறுதிமொழி எடுக்க விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கை நிறைவடையும் வரை உங்களிடத்தில் உள்ள அன்பும் ஆதரவும் குறையாமல் மேலும் ஒவ்வொரு நாளும் உங்களை கொண்டாடுவதை உறுதி செய்வேன் என்று பதிவிட்டுள்ளார்.