தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தொழிலாளர் கல்வி நிலையத்தில் பிஏ, எம்ஏ, பிஜிடிஎல்ஏ, டிஎல்எல் போன்ற படிப்புகளுக்கு விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த கல்வி நிலையத்தில் படித்த மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தப் படிப்பில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் ஜூன் 8-ம் தேதி போல் விண்ணப்பிக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள ஒருங்கிணைப்பாளர் முனைவர். இரா ரமேஷ்குமார், இணைப்பேராசிரியர் செல்போன் நம்பர் 9884159410 தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய மின்வாரிய சாலை, மங்களபுரம், அம்பத்தூர் மற்றும் சென்னை 600 098 என்ற முகவரியை அணுகலாம்.