மகாராஷ்டிராவில் உள்ள தானேவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனருக்கும் போக்குவரத்து காவலருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ பதிவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைகிறார். அதனைத்தொடர்ந்து போக்குவரத்து காவலரும் ஓட்டுனரை கன்னத்தில் பளார் விடும் சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இந்த சம்பவம் நடைபெற்றது என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பணியில் இருக்கும் போது சட்ட அமலாக்கப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது,

இதுகுறித்து தானே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர்

“>