பொதுவாக வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்பவர்களுக்கு வருமான வரித்துறை ஈவெரிபை சரிபார்ப்புக்கான காலகெடுவை வழங்கும். வரி செலுத்துவோர் ரிட்டன்களை தாக்கல் செய்து உரிய தேதிக்குள் இணையத்தில் சரிபார்க்கவில்லை என்றால் அந்த ரிட்டன் கோரிக்கைகள் செல்லாது. இந்த நிலையில் ஐ ஆர் டி தாக்கல் செய்தவர்கள் வங்கி ஏடிஎம் மூலமாக E-Verify செய்யலாம்.

வங்கி ஏடிஎம்-க்கு சென்று கார்டை ஸ்வைப் செய்து, PIN- ஐ உள்ளிடவும். அடுத்து வருமான வரி தாக்கல் செய்ய EVC உருவாக்கும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். E-Filing போர்ட்டாலில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு EVC அனுப்பப்படும். பின்னர் அதனைக் கொண்டு என்னிடம் EVC உள்ளது என்பதை தேர்ந்தெடுப்பதன் மூலமாக வருமானத்தை E-Verify செய்ய முடியும்.