நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய “பதான்” படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வசூல் சாதனைகளையும் படைத்துள்ளது. இதையடுத்து ஷாருக்கான் டைரக்டர் அட்லி இயக்கக்கூடிய “ஜவான்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா, நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் அட்லி-பிரியா தம்பதியினருக்கு சமீபத்தில் ஆண்குழந்தை பிறந்ததால் திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது அவரிடம், அட்லியின் குழந்தையை பார்த்தீர்களா? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஷாருக்கான், தான் அட்லியின் குழந்தையை பார்த்ததாகவும், ஆண்டவன் அருளால் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகவும் பதிலளித்தார்.