ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வரும் பிப்,.27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் MLA தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகனும் அறிவிக்கப்பட்டனர். இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவது எனும் குழப்பம் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், உச்சநீதிமன்றம் ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம்.

பொதுக் குழுவில் எடுக்கப்படும் முடிவு அவைத்தலைவரால் தேத்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடுக்கான ஏ, பி உள்ளிட்ட படிவத்தில் கையெழுத்திட அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவும் பொதுக்குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதேபோல் இபிஎஸ் அறிவித்த இடைத்தேர்தல் வேட்பாளர் தென்னரசுவை பொழுதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரித்தனர்.