கும்பம் ராசி அன்பர்களே…!
உங்களிடம் ஏட்டிக்குப் போட்டியாக பேசியவர்கள் இன்று விலகிச்செல்வார்கள்.

எதிரிகள் பணிந்து போவார்கள்.எதிர்ப்புகள் குறையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். நன்மை பயக்கும் நாளாக இன்றைய நான் இருக்கும். பெயரும் புகழும் ஓங்கி நிற்கும். உத்தியோக வாய்ப்புகள் வந்து சேரும். பெண் சினேகம் ஏற்படும். பெண்களால் முன்னேற்றமான சூழலும் இருக்கும். எந்த ஒரு வேலையையும் சிறப்பாகவே நீங்கள் செய்து முடிப்பீர்கள். செயலில் வேகம் காட்டுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்கக்கூடும். ஆனால் செலவு இருக்கும். வரவு கொஞ்சம் மட்டுதனமாகத்தான் கிடைக்கும். வரவை நீங்கள் ஏற்படுத்திக் கொள்வதற்காக கடுமையாகவும் உழைப்பீர்கள். சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர் வருகை இருக்கும். அதே நேரத்தில் அவருடன் சின்னச் சின்ன வாக்குவாதங்களும் இருக்கும். கூடுமானவரை எந்த ஒரு விஷயத்திலும் வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். கோபமான பேச்சை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். வாக்குறுதிகள் கொடுப்பதையும் நிறுத்திக் கொள்ளுங்கள்.

அதேபோல் யாரையும் தயவுசெய்து குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். இந்த விஷயங்களை மட்டும் இன்று கவனமாகவே நடந்து கொண்டால் போதுமானது. மீதி இருக்கக்கூடிய விஷயங்களில் வெற்றி உங்கள் பக்கம்தான். அதேபோல் அனைவரையும் அனுசரித்து செல்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை கட்டாயம் மேற்கொள்ளுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். உடல் உஷ்ணம் போன்ற சில பிரச்சினைகள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.