இன்றைய  பஞ்சாங்கம்

06-05-2023, சித்திரை 23, சனிக்கிழமை, பிரதமை திதி இரவு 09.52 வரை பின்பு தேய்பிறை துதியை.

 விசாகம் நட்சத்திரம் இரவு 09.13 வரை பின்பு அனுஷம்.

 நாள் முழுவதும் சித்தயோகம்.

இராகு காலம் – காலை 09.00-10.30,

  எம கண்டம் மதியம் 01.30-03.00,

 குளிகன் காலை 06.00-07.30,

 சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

இன்றைய ராசிப்பலன் –  06.05.2023

மேஷம்

உங்களின் ராசிக்கு நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல் 3.22 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஏற்றங்கள் உண்டாகும். நண்பர்கள் உதவியுடன் எடுத்த காரியத்தை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும், கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய முயற்சிகளில் ஆர்வம் அதிகமாகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பற்ற முடியும்.

கன்னி

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.

துலாம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். சிலர் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். வேலையில் உடன் பணிபுரிபவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.

தனுசு

உங்களின் ராசிக்கு உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சிலருக்கு புதிய பொருள், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண சிக்கலை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 3.22 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை மதியத்திற்கு பின் செய்வது நல்லது.