மீனம் ராசி அன்பர்களே…!
இன்று மிக முக்கியமான விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரக்கூடிய நாளாக அமைகிறது.

வெகு நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை நீங்கள் இன்று வாங்குவீர்கள். உங்கள் மனதில் இருந்த காயங்கள் படிப்படியாக மாறிவிடும். நம்பிக்கைதான் வாழ்க்கை எப்பொழுதும் அனைத்து விஷயங்களையும் நீங்கள் நம்புவது சிறந்தது. வாழ்க்கைத்துணை வழியாக உங்களுக்கு வரவுகள் வந்து சேரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கைகூடும். சுப செலவுகள் இன்று அதிகரிக்கும்.கையிலிருக்கும் பணம் சிறிது கரையை கூடும்.
இன்று நீங்கள் புத்தி கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். நண்பர்களிடம் சுமுகமாக செல்வது சிறந்தது. நண்பர்களிடம் நிதானமாகப் பேசுங்கள். நீங்கள் கொடுத்த பணம் வருவதற்கு தாமதங்கள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரங்களில் சிறு தடைகள் ஏற்பட்டு பின்பு வெற்றி கிடைக்கும். தடைகள் ஏற்பட்டாலும் நீங்கள் உங்கள் மனதை வருத்திக் கொள்ள வேண்டாம். உங்கள் உறுதியும் தன்னம்பிக்கையும் நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் அதனை நீங்கள் அதிகரித்து மன பலத்துடன் இருக்க வேண்டும். பணவரவுகளுக்கு கண்டிப்பாக நல்ல விதத்தில் அமையும்.
உற்சாகமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும்.
வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மனதை நீங்கள் தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். பெரிய தொகையை பயணத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டாம்.
இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. சரியான நேரத்திற்கு தூங்குவது சிறந்தது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரக்கூடும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது சிறந்தது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
மாணவர்கள் கல்வியில் எடுக்கக்கூடிய முயற்சியில் வெற்றி கிட்டும். ரொம்ப நாட்கள் தடையாக இருந்த கல்வியில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். படித்த பாடத்தை படித்தபின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது நீலம் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. நீலம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 3 மற்றும் 9.அதிர்ஷ்டமான நிறம் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.