கடகம் ராசி அன்பர்களே..!
இன்று தடங்கலும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும்.

உறவினர்களின் வகையில் மனவருத்தம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலின் போது கூடுதல் கவனம் வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று யோசித்து நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகவே இருக்கும். பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். உணவு வகையில் கவனம் தேவை.

தொழிலை விரிவாக்க எடுக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும். இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். போட்டிகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடும். மற்றவர்களின் பிரச்சினையில் ஈடுபட வேண்டாம். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் சிவப்பு நிறம்.