
அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக இருப்பவர் அங்கித தத்தா. இவர் தற்போது இந்திய காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ் தொடர்ச்சியாக தன்னை துன்புறுத்துவதாக கூறி பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளார். தன்னுடைய பாலினத்தை கூறி ஸ்ரீனிவாஸ் தொடர்ச்சியாக தன்னை துன்புறுத்துவதாகவும், இதுகுறித்து காங்கிரஸ் மேலிடத்தில் பலமுறை புகார் கொடுத்தும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி போன்ற யாருமே இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என twitter-ல் தெரிவித்துள்ளார்.
கடந்த 6 மாதங்களாக இந்திய காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஸ்ரீனிவாஸ், இளைஞர் அணி செயலாளர் வர்தன் யாதவ் ஆகியோர் தன்னை துன்புறுத்துவதாக அங்கித தத்தா குற்றம் சாட்டியுள்ள நிலையில் இவர்களுக்கு எதிராக இதுவரை கட்சி சார்பில் விசாரணை கமிட்டி அமைக்கப்படவில்லை என கூறியுள்ளார். மேலும் இது தற்போது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
@IYC President @srinivasiyc has continually harnessed me and was discriminating on the basis of my gender. My values and education doesn’t allow me anymore. The leadership has played deaf ears despite bring front of them MANY TIMES @RahulGandhi @kcvenugopalmp @priyankagandhi
— Dr Angkita Dutta (@angkitadutta) April 18, 2023