கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்றும் பிரதான கட்சிகளாக போட்டியிகிறது. இந்த மூன்று கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சிவக்குமார் வாக்கு செலுத்த வருவதற்கு முன் அனைவரும் வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டர்களை கும்பிட்டு விட்டு வாருங்கள். அதன் பிறகு யாருக்கு வாக்கு செலுத்தலாம் என்பதை முடிவு செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். தற்போது எல்பிஜி சிலிண்டரின் விலை 1100 ரூபாய் ஆக இருக்கிறது.

பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கு சிலிண்டர் விலை என்பது பெரும் சுமையாகவே இருக்கிறது. இதனால் தற்போது எதிர்கட்சிகள் எல்பிஜி சிலிண்டர் விலையை கையில் எடுத்து பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வகையில் மத சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்றால் வருடத்திற்கு 5 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும், சலுகை விலையில் 10 சிலிண்டர்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் எனவும் குமாரசாமி தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் தற்போது எல்பிஜி சிலிண்டர் விலையை பிரதானமாக எடுத்து வாக்கு சேகரிப்பது ஆளும் கட்சி மத்தியில் டென்ஷானை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.