இந்தியாவில் கோடை காலத்தை முன்னிட்டு தினந்தோறும் வெயில் வாட்டி வதைக்கிறது. இனி வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் குழந்தைகளின் உடல்நிலைக்கு எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் ஜார்கண்ட் மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மழலையர் பள்ளி முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் 11 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 6-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு பிற்பகல் வரை வகுப்புகள் நடைபெறும் என  ஜார்கண்ட் மாநிலத்தின் கல்வித்துறை அறிவித்துள்ளது.