ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலை தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் தற்போது இந்தியா மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் ஜப்பான் மூன்றாம் இடத்திலிருந்து நிலையில் தற்போது ஜப்பானில் பின்னுக்கு தள்ளி இந்தியா அந்த இடத்திற்கு முன்னேறியுள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது. அதாவது இந்தியா ‌ பொருளாதார வளர்ச்சியில் 4.2% அளவிற்கு உயர்ந்த சக்தி வாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு மக்களின் வாங்கும் சக்தி அடிப்படையில் தான் உலகின் 3-வது பெரிய பொருளாதாரத்தை இந்தியா பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனா மற்றும் ஜப்பான் நாட்டில் மக்கள் தொகையில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உழைக்கும் வயதுடைய இளைஞர்கள் அதிகரித்து வருவதால் தான் பொருளாதார வளர்ச்சி என்பது வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கும் நிலையில், சீனா 2-ம் இடத்திலும், இந்தியா 3-ம் இடத்திலும், ஜப்பான் 4-ம் இடத்திலும், ஆஸ்திரேலியா 5-ம் இடத்திலும், ரஷ்யா 6-ம் இடத்திலும், தென் கொரியா 7-ம் இடத்திலும், சிங்கப்பூர் 8-ம் இடத்திலும், இந்தோனேசியா 9-ம் இடத்திலும், தாய்லாந்து 10-ம் இடத்திலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.