
இந்தியாவில் ஒவ்வொரு மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளது. அதாவது திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை போன்றவற்றிக்கு அந்தந்த நபரின் மதத்திற்கு ஏற்றவாறு சிவில் சட்டங்கள் உள்ளது. அதே வேலை நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதற்கு பலரும் எதிர்ப்பையும் தெரிவித்து வந்தனர். இதற்கிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 2022 ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று பாஜக வாக்குறுதி கொடுத்தது. அதன் பின் பாஜக தேர்தலில் வெற்றியும் பெற்றது. முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அம்மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் திட்டம் அமலுக்கும் வந்துள்ளது.