
டைரக்டர் ஏ.எல்.விஜய் இப்போது அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே” என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். அண்மையில் இந்த படத்தின் டைட்டில் “மிஷன் சாப்டர் 1: ஃபியர்லஸ் ஜார்னி” என மாற்றப்பட்டது. இப்படத்தின் நாயகியாக எமி ஜாக்சன் நடித்து உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.
இப்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. எம்.ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்திருக்கும் இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
A Top Notch High Octane Action TEASER of @arunvijayno1's #MISSION 😎 Chapter 1 is here❗
🎬 #Vijay
🌟 @arunvijayno1 @iamAmyJackson @NimishaSajayan @AbiHassan_
🎶 @gvprakash
📽️ @sandeepkvijay_
✂️🎞️ @editoranthony
💪🏻 @silvastunt pic.twitter.com/YYSsHB49ZU— Lyca Productions (@LycaProductions) April 5, 2023