தமிழுக்கு தொண்டாற்றிய தலைவர்களில் கலைஞர் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற போது கடந்த 1973-ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த வள்ளுவர் கோட்டத்தின் அமைப்பு திருவாரூர் தேர் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேரை இரண்டு யானைகள் இழுத்துச் செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், 39 மீட்டர் கொண்ட இந்த தேரில் வள்ளுவரின் 133 அதிகாரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உச்சியில் திருவள்ளுவர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு வள்ளுவர் கோட்டத்திற்குள் 4000 பேர் உட்காரும் வகையில் ஆடிட்டோரியம் அமைக்கப்பட்டுள்ளதோடு, அதில் 1330 குறள்களும் எழுதப்பட்டுள்ளது. திருவள்ளுவரின் கனவாக உருவாகிய வள்ளுவர் கோட்டத்தின் திறப்பு விழாவுக்கு அவர் அழைக்கப்படவில்லை. நெருக்கடி காலகட்டத்தில் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டதால் அப்போதைய ஜனாதிபதி பக்ருதின் அலி வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்தார். வள்ளுவர் கோட்டம் திறப்பு விழாவுக்கு அழைக்கப்படாததால் தன்னுடைய மன வருத்தத்தை கலைஞர் ஒரு கவிதையாக வெளியிட்டு இருந்தார்.

இந்த வள்ளுவர் கோட்டத்திற்குள் 10 ரூபாய் என்ற கட்டணம் அடிப்படையில் மாலை 5.30 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வள்ளுவர் கோட்டத்திற்குள் களைச்சொடிகள் வளர்ந்து கலை இழந்து காணப்படுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றபோது அமைச்சர் மு.பெ சாமிநாதன் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வள்ளுவர் கோட்டத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். ஆனால் இதுவரை சீரமைப்பு பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது வள்ளுவர் கோட்டத்தை மீண்டும் சீரமைக்க வேண்டும் என பார்வையாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.