சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை மாநகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் உள்ள கடற்கரைகளை அழகுப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவரும் அமைச்சருமான சேகர்பாபு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது வடசென்னையில் உள்ள ஒரு கடற்கரை மற்றும் தென் சென்னையில் உள்ள ஒரு கடற்கரை அழகு படுத்தப்பட இருக்கிறது. அதன்படி திருவொற்றியூர் கடற்கரை மற்றும் நீலாங்கரை-அக்கரை கடற்கரைகள் அழகு படுத்தப்பட இருக்கிறது. அதோடு காசிமேடு துறைமுகத்தை அழகு படுத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறியுள்ளார். அதன் பிறகு நீலாங்கரையில் இருந்து அக்கறை வரை சைக்கிளிங் செல்வதற்காக 5 கிலோமீட்டருக்கு பாதை அமைக்கப்பட இருக்கிறது. மேலும் அறிவிக்கப்பட்ட பணிகள் இன்னும் ஓர் ஆண்டுக்குள் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும் என அமைச்சர் உறுதி கொடுத்துள்ளார். இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.