விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 14 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் நேற்று விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டதோடு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்பிறகு டாஸ்மாக் கடைகளில் உள்ள மது பாட்டில்களில் கள்ளச்சாராயம் கலந்த குற்றவாளிகள் மெத்தனால் ஏரி சாராயத்தை பயன்படுத்தியது  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவதாக அறிவித்துள்ளதோடு  கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி கொடுத்துள்ளார்.