தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு என்ற உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி மீதான சம்மண் ரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மனுவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த சம்மனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அமலாகத் துறை சார்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த இரண்டாம் தேதி தள்ளி வைத்தது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அது அமைச்சருக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை எதிர்த்து அமலாகத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை கேட்டுள்ளது.