உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் பகுதியில் இளம் ராணுவ வீரர்கள் பயிற்சியை முடித்து பணியில் சேர தயாராகி உள்ளனர். பயிற்சி முடிந்த பின் இளம் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. இதனை நேபாள ராணுவ தலைவர் ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல் ஆய்வு செய்தார்.

இறுதியாக அணிவகுப்பு முடிந்தபின் ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவி இளம் ராணுவ வீரர்களை ராணுவ துறை கௌரவித்தது. இந்தக் காட்சி வீடியோவில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு  சமூக வலைதளங்களில் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.