கர்நாடகா மாநிலம் பெங்களூரில் டாப்மேட் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அது வழக்கம் போல் பட்டதாரிகளுக்கு வழங்கும் வேலை அல்ல. அந்நிறுவனம் காதலில் கை தேர்ந்தவர்களை மட்டுமே தேடி வருகிறது. பக்காவான காதல் மன்னனை தலைமை டேட்டிங் அதிகாரி பதவியில் அமர்ந்த நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் நிறுவனத்திற்கு தேவையான தகுதி குறித்தும் அறிவித்திருந்தது. அதன்படி தலைமை டேட்டிங் அதிகாரி பதவிக்கு விண்ணப்பம் செய்பவர் காதலில் கைதேர்ந்தவர்களாகவும், குறைந்தது ஒரு காதலில் ஆவது தோல்வி அடைந்து இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

மேலும் விண்ணப்பதாரர்கள் 3 டேட்டிங் செலிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் காதல் டேட்டிங்கில் தற்போதைய டிரெண்டில் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. டேட்டிங் போக்குகள் பற்றிய அறிவு மற்றும் புதியவற்றை உருவாக்குவதற்கான திறன் குறைந்தது 2,3 டேட்டிங் பயன்பாடுகளில் முதல் அனுபவம் இருக்க வேண்டும்.  மேலும் டாப்மேட் விருப்பமான விண்ணப்பதாரர்கள் டேட்களை பெறுவார்கள், காதல் வகை டேட்டிங் அல்ல ஆனால் அது உண்மையான சாப்பிடும் வகை டேட்ஸ் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பின் பதிவு எக்ஸ் வலைப்பக்கத்தில் வைரலாகி வருகிறது.