நாம் அனைவருக்கும் காலையில் சீக்கிரம் எழுவதற்காக செல்போனில் அலாரம் வைக்கும் பழக்கம் உண்டு. அப்படியே வைக்கும் அலாரம் அடிக்கும் போது அதை Snooze-ல் வைக்கும் பழக்கமும் அனைவருக்கும் உண்டு. இந்நிலையில் அப்படி Snooze-ல் வைப்பது நல்லதல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 80 சதவீத பேர் இப்பழக்கத்தை பின்பற்றுவதாகவும் இது மோசமான தூக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. சிறிது நேரம் அதிகம் தூங்க நினைத்து பலரும் இதனை செய்கின்றனர். ஆனால் இந்த கூடுதல் தூக்கம் மிகவும் லேசானதாக இருப்பதால் மூளையின் செயல்பாட்டுத் திறன், கனவு உள்ளிட்டவற்றை தொந்தரவு செய்யும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.