மின்சார வயர்களில் வேலை செய்வது என்றாலே பலருக்கும் நடுக்கம் ஏற்படும். ஆனால், சில இளைஞர்கள் எந்தவொரு பயமும் இன்றி, தரையில் இருந்து பல அடி உயரத்தில் உள்ள ஹை-டென்ஷன் மின்சார வயர்கள் மீது சாதாரணமாக நடந்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

கிராமப்புற வயல்வெளிகளில் மின்சார வயர்களை இழுத்துக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள இந்த எலக்ட்ரீஷியன்கள், சர்க்கஸ் வீரர்களை விடவும் மிக லாவகமாக அந்த மெல்லிய வயர்கள் மீது பேலன்ஸ் செய்து ஓடுகின்றனர்.

கீழே இருப்பவர்கள் கயிற்றைக் கொண்டு வயரை இழுக்க, மேலே இருக்கும் இளைஞர்கள் அதன் மீது அசால்ட்டாக ஓடிச் சென்று வேலை செய்யும் காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் 10 லட்சம் (1 Million) பார்வைகளைக் கடந்து ட்ரெண்டாகி வருகிறது. “இவர்களின் துணிச்சலுக்கு ஒரு ராயல் சல்யூட்” என்றும், “உயிரைப் பணையம் வைத்து உலகிற்கு ஒளி தரும் இவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள்” என்றும் நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.