மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி உயர்வின் முதல் சுற்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 2023 உயர்வுக்கான பட்டியலில் மேலும் 4% அதிகரிப்பு இருக்கலாம் என்பதற்கான வலுவான அறிகுறிகள் இருக்கிறது. சென்ற 4 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் (AICPI) சமீபத்திய அறிக்கைகள் மற்றும் தரவுகளின் படி, நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் ஜூலை 2023-க்கு மத்திய அமைச்சரவை மேலும் 4% DA உயர்வை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர இருக்கும் ஏஐசிபிஐ புள்ளி விவரங்களுக்குப் பின் மத்திய ஊழியர்களுக்கு 3 (அ) 4 சதவீதம் உயர்வு கிடைக்குமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படும். மற்றொருபுறம் அகவிலைப்படி அதிகரிப்பை கணக்கிடுவதற்கான புது சூத்திரத்தை மையம் பரிசீலித்து வருவதாக சமீபத்திய ஊடக அறிக்கைகள் கூறுகிறது. அடுத்த சில வருடங்களில் ஊதியக்குழுவை ரத்து செய்ய அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது மற்றும் மத்திய ஊழியர்களின் சம்பளத்தை கணக்கிடுவதற்கான புது ஃபார்முலாவை அறிமுகப்படுத்தவுள்ளது என சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

விதிகளில் புது மாற்றத்தில் பணியாளர்கள் பொருத்துதல் காரணியில் மாற்றம் அனுமதிக்கப்படலாம். இப்போது 7-வது ஊதியக்குழு விதிகளின்படி பிட்மென்ட் காரணி 2.57 மடங்கு இருக்கிறது. மத்திய அரசு பிட்மென்ட் காரணியை மதிப்பாய்வு செய்து அதிகரிக்கலாம் என ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிக்கை தெரிவித்துள்ளது. பிட்மென்ட் காரணி அதிகரிப்பில் 2 கருத்துக்கள் இருக்கிறது. அதாவது, 2.57-ல் இருந்து 3 (அ) 3.68 ஆக உயரலாம்.