இலவச ரேஷன் பெற்று வருபவர்களுக்கு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி ரேஷன் கார்டுதாரர்களுக்கான புது விதிமுறைகளை மத்திய அரசானது வெளியிட்டுள்ளது. இனிமேல் ரேஷன் கடைகளில் புதிய சாதனம் பயன்படுத்தப்படும்.

இதன் வாயிலாக ரேஷன் கார்டுதாரர்கள் மிகவும் பயன்பெறுவார்கள். அரசு வெளியிட்டுள்ள புது விதிகளின் படி, ரேஷன் முழுவதுமாக கிடைக்கும் விதமாக கடைகளில் மின்னணு பாயின்ட் ஆப் சேல் கருவிகள் கட்டாயம் செய்யப்பட்டுள்ளது.

அதோடு இதன் மூலம் இனி மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என கூறப்படுகிறது. இச்சாதனம் இன்றி ரேஷன் வழங்கப்படமாட்டாது. ரேஷன் கடைகளில் மின்னணு தராசுகளுடன் மின்னணு விற்பனை சாதனங்களை இணைக்கும் அடிப்படையில், உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்து பயனாளிகள் முழு அளவில் உணவு தானியங்களைப் பெற வழிவகை செய்துள்ளது.