சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நாகவள்ளியில் தனியார் மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் படிக்கிறார்கள். இந்த கல்லூரி பேருந்துகளில் பெரும்பாலும் ஆண் டிரைவர்களின் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் முறையாக பெண் ஓட்டுனர் ஒருவர் கல்லூரி பேருந்து இயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி சேலம் முத்து நாயக்கன்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற பெண் தற்போது தனியார் மகளிர் கல்லூரி பேருந்து ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்.

இவருடைய தந்தை மணி லாரி ஓட்டி வந்ததால் சொந்தமாக லாரி வைத்து தொழில் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக கடந்த 10 வருடங்களாக தமிழ்ச்செல்வி கர்நாடகா மற்றும் தமிழகத்தில் லாரி ஓட்டியுள்ளார். தற்போது தனியார் கல்லூரியில் கல்லூரி பேருந்து இயக்குவதற்கான காலி பணியிடம் இருப்பதாக கேள்விப்பட்டு தமிழ்ச்செல்வி அதில் விண்ணப்பித்துள்ளார். தமிழ்செல்வி தற்போது கல்லூரி பேருந்த இயக்குவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவிகள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தமிழ்ச்செல்விக்கு தற்போது பாராட்டுகளும் குவிந்து வருகிறது.