2022-23ஆம் கல்வியாண்டானது முடிவடைந்து 2023-24 கல்வி ஆண்டானது ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் இந்த திட்டம் சோதனை முயற்சியாக சில மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த வருடம் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டமானது அமல்படுத்தப்பட உள்ளது.

அந்த வகையில் உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் மாணவர்களுடைய எண்ணிக்கை குறித்த விவரங்களை சமர்ப்பிக்க கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டவுடன் சமையலறை கட்டமைப்புக்கு புதிய வண்ணம் பூசியும் சமையல் செய்ய ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்கவும் பள்ளி நிர்வாகங்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.