ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட உயரிய நிர்வாக பணியிடங்களுக்கு நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 1056 பணியிடங்களுக்கான இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் அதாவது மார்ச் 5ம் தேதி வரை மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே இப்போதே விண்ணப்பித்து விடுங்கள். முதல்நிலை தேர்வு மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு upsconline.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.