450 மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களில் 112 பணியிடங்கள் பெண் அதிகாரிகளுக்கானது எனவும் தெரிவித்துள்ளது. இதில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எம்பிபிஎஸ் படித்து முடித்திருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி கடைசி நாள் ஆகும். ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.