இந்தியாவில் அப்பிள் ஐஃபோன் 17 தொடர் விற்பனைக்கு வந்ததும், பிஎக்ஸ்சி மற்றும் டெல்லியின் சகேத் ஆப்பிள் ஸ்டோர்களில் நீண்ட வரிசைகள் இருந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவிட்டன. ஆனால் இதில் ஒரு வீடியோ வித்தியாசமான கவனத்தை பெற்றுள்ளது.

 

அப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் நேரில் இருந்தபோது, ஒரு பிரபல கண்டென்ட் கிரியேட்டர் தனது புதிதாக வாங்கிய “Cosmic Orange” iPhone 17- ல் அவரிடம் கையொப்பம் வாங்க முயன்றார். ஆனால் அதை பாக்ஸிலிருந்து எடுக்கும்போது தவறி கீழே விழுந்துவிட்டது. அதை விரைவில் எடுத்து வைத்த அவர், வருத்தத்துடன் நிற்கிறார். டிம் குக் பின்பு கையொப்பம் வைக்கும் முயற்சியில் இருந்தபோது, அந்த விலாகர், சாதாரணமாக பின்புறத்தில் கையொப்பம் வைக்காமல், ஸ்க்ரீன் பாதுகாப்பு கவர் மீது கையொப்பம் கேட்க, நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஒரு பயனர், இது போல ‘ஸ்டைல் காட்ட முயன்றால் இப்படி தான் ஆகும்’ என்பதற்கான நவீன உதாரணமாக இச்சம்பவம் உருவாகியுள்ளது. iPhone 17, iPhone Air, iPhone 17 Pro மற்றும் Pro Max ஆகியவை ரூ. 82,900 முதல் ரூ. 2,29,900 வரை விலையிலுள்ளது.