டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீது என்னென்ன புகார்கள் எல்லாம் தெரிவிக்கப்பட்டதோ,  குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை டெண்டர் எவ்வளவு முறைகேடாக விடப்பட்டது ? கடன் உதவியால் தான் நெடுஞ்சாலை துறை டெண்டர் நிதி என்பது கிடைத்தது.

உலக வங்கியில் இருந்து ஒரு திட்டத்திற்காக கடன் வாங்கும் போது என்னென்ன வழிகாட்டு நெறிமுறைகள் எல்லாம் கடைபிடிக்கப்பட்டு இருக்கிறது.  குறிப்பாக டெண்டர் யார் யாருக்கு விடப்பட வேண்டும் ? அரசு துறையில் இருப்பவருக்கு விடக்கூடாது.

ஆதாயம் தரக்கூடிய பதவியில் இருப்பவர்களுக்கு… ஆதாயம் பெறக்கூடிய பதவியில் இருப்பவர்கள்… உறவினர்களுக்கு விடக்கூடாது. இப்படியான ஏராளமான  டெர்ம்ஸ் &  கண்டிஷன்கள் இருக்கிறது. கடன் கொடுக்கக்கூடிய உலக வங்கி என்பது எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும்,  நாங்கள் கொடுக்கக்கூடிய கடனை நீங்கள் எந்த வகையில் எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டு வழிமுறைகள் இருக்கிறது.

அப்படி இருக்கும் போது நெடுஞ்சாலை துறைக்கான டெண்டரில் டெர்ம்ஸ் &  கண்டிஷன்கள் முழுமையாக பின்பற்றப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆதாயம் பெற்று இருக்கின்றார். அதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டிருக்கிறது போன்ற விஷயங்களை எல்லாம் தான் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் ஆர்.எஸ். பாரதி ஆட்சி மாற்றத்துக்கு முன்பாக சிறப்பு புலனாய்வு குழு (CBI) விசாரணையை கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் தான் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றமும்  முதலில் பரிந்துரை செய்தார்கள். அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது திமுக ஆட்சி  வந்திருக்கக்கூடிய சூழல் காரணமாக….  லஞ்ச ஒழிப்பு துறையே வழக்கை  விசாரிக்கலாம் என்பதற்கான ஒரு நிலைப்பாட்டை அவர் எடுத்திருந்தார்.

மேலும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை திரும்ப பெற வேண்டும் என்று தான் அவர் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான மனுக்கள் அத்தனையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருப்பதன் காரணமாக தான் தற்போது லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.