கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகிய 3 படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதையடுத்து வை ராஜா வை திரைப்படத்தையும் இயக்கினார். அதன்பின் அவர் பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “லால் சலாம்” எனும் புது திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதோடு நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். பொங்கல் பண்டிகையின்போது தனது பெற்றோர்கள் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்திடம் ஆசிர்வாதம் பெறும் புகைப்படங்களை அவர் தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்து “உங்களுக்கும் உங்களது அன்புக்குரியவர்களுக்கும் இது மறக்க முடியாத பொங்கலாக இருக்கும் என்று நம்புகிறேன். கடவுள் மகிழ்ச்சி மற்றும் அமைதியை வழங்கட்டும்” என பதிவிட்டுள்ளார். இப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.