ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிய “துணிவு” படம் சென்ற 11ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் டைரக்டில் AK-62 படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
இப்படத்தின் சூட்டிங் வருகிற மே மாதம் தொடங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் AK-62 திரைப்படத்தின் புது தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும், படப்பிடிப்பு பெரும்பாலும் மும்பை மற்றும் சென்னை பகுதியில் நடக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.