கோவையில் வஉசி மைதானத்தில் நடந்த முதல்வர் புகைப்பட கண்காட்சி நிறைவு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “தமிழக பாஜக அண்ணாமலை வெளியிட்ட சொத்து மதிப்பு பட்டியல் பற்றி சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். அதோடு அண்ணாமலை காட்டியதை மனசாட்சியுள்ள யாருமே பில்லாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த எக்ஸ் எல் சீட் தயாரிக்கவா 4 மாதம் ஆகியது?.

எனக்கு எதுவுமே இல்லை, அனைத்துமே என் நண்பர்கள் கொடுக்கிறார்கள் என அண்ணாமலை கூறுகிறார். அதோடு லஞ்சத்தை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்கிறார் அண்ணாமலை. அதே நேரம் பரிசு கொடுத்தார்கள் என கூறுவதில் அண்ணாமலைக்கு என்ன தயக்கம்?. தேசிய கட்சியில் இருந்துகொண்டு எந்த அடிப்படை முகாந்திரமும் இன்றி குற்றச்சாட்டை சொல்கிறார். என்னை பற்றிகூட அவர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். முதலமைச்சரின் அனுமதி பெற்று நானே நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கை தாக்கல் செய்வேன். ஒரு பொய்யை மறைப்பதற்கு ஓராயிரம் பொய்யை சொல்கிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.