
சீனாவில் 3,600 ஆண்டுகள் பழமையான சீஸ் கண்டுபிடிப்பு அறிவியல் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பண்டைய காலத்தில் மம்மிகளின் தலை மற்றும் கழுத்தில் தடவப்பட்ட நிலையில் இந்த சீஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக நடைபெற்ற DNA ஆய்வில், இந்த சீஸ் பசு மற்றும் ஆட்டு பாலிலிருந்து தயாரிக்கப்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர். இந்த சீஸ் புரோபயாடிக் சீஸாகும், அதாவது ஆரோக்கியமான பாக்டீரியாவால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மம்மிகளின் உடலிலிருந்து மர்மமான வெள்ளை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதன் அடிப்படை துல்லியமாக கண்டறியப்படவில்லை. அண்மையில் செய்யப்பட்ட DNA ஆய்வு மூலம் இது பண்டைய சீஸாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான சீஸ் மாதிரி என ஆராய்ச்சியாளர் கியாமி ஃபு தெரிவித்தார்.
இந்த கண்டுபிடிப்பு பண்டைய காலங்களில் சீஸ் தயாரிப்பு முறைகள், உணவுப் பழக்கங்கள், மற்றும் மனிதர்களின் ஆரோக்கியத்தின் மீதான நுணுக்கமான புரிதலை வெளிப்படுத்துகின்றது.