
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பர்கதுல்லா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அம் மாநில பாஜக கல்வி மந்திரி இந்தர் சிங் பர்மர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய மாணவர்களுக்கு தவறான விஷயங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் கிடையாது. நம்முடைய முன்னோர்கள் தான் கண்டுபிடித்தார்கள். ஒரு இந்திய மாலுமி எட்டாம் நூற்றாண்டில் சாங் டியாக்காவில் பல கோவில்களை காட்டினார். அவை அருங்காட்சியகல் மற்றும் நூலகங்களில் இன்றளவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதை நம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். குஜராத்தில் நடந்த தொல்லியல் ஆராய்ச்சியில் 5500 வருடங்கள் பழமையான 2 பெரிய மைதானங்கள் கண்டறியப்பட்டுள்ளது. நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே நம்முடைய முன்னோர்கள் விளையாட்டுப் போட்டிகள் பற்றி நன்கு அறிந்துள்ளனர். ராமர் சிலைகளை உருவாக்கிய பால் பாகு என்ற இந்திய கட்டிடக்கலை நிபுணர் உதவியுடன் பீஜிங் நகரம் வடிவமைக்கப்பட்டது. ரிக் வேதத்தில் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்பது இருக்கிறது. மேலும் திட்டமிட்டு இந்தியாவின் நன்மதிப்பை குறைத்துள்ளனர் என்று கூறினார்.