தமிழகத்தில் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு தற்போதிருந்தே அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. இந்நிலையில் அதிமுக கட்சியில் சமீப காலமாகவே சலசலப்புகள் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்றும், இதை ஏற்றுக் கொள்ளும் காட்சிகளை நாங்கள் சேர்த்துக் கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமையும் என்று அறிவித்ததால் எங்கள் தலைமையில் கூட்டணியை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளை மட்டும் தான் நாங்கள் சேர்த்துக் கொள்வோம் என்றும் செல்லூர் ராஜு கூறியுள்ளார். பாஜக மற்றும் அதிமுக கூட்டணி உறுதி என்று மேலிடம்அறிவித்த  நிலையில் மாநில தலைவர் அண்ணாமலை பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று கூறியுள்ளார். மேலும் இதனால் தற்போது மீண்டும் அதிமுக மற்றும் பாஜக இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.