இலவச ரேஷன் திட்டத்துக்கு மத்தியில் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ரேஷன் அட்டைகளின் பட்டியல் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல பெயர்கள் இந்த அப்டேட் முறையில் சேர்க்கப்படுகிறது. மற்றொருபுறம் சிலரின் பெயர் நீக்கப்படுகிறது. அதன்படி இந்த சந்தர்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மோசடி செய்வோர் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இதுகுறித்து அரசும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. மோசடி செய்பவர்கள் பெயர் நீக்கப்பட்ட நபர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, அவர்களின் பெயர்களைச் சேர்க்க மோசடி வழிமுறைகளை பின்பற்றுமாறு கூறுகின்றனர். இது போன்ற பல்வேறு மோசடி வழக்குகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.  அதோடு உங்கள் கணக்கில் இலவச ரேஷன் பணத்தை பெறுவதற்கான செய்தி கிடைத்தால், இணைப்பை கிளிக் செய்யுமாறு கூறுகின்றனர். இருப்பினும் இதுபோன்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த இணைப்பை கிளிக் செய்வதன் வாயிலாக உங்களுக்கு அதிக செலவு ஏற்படலாம் மற்றும் நீங்கள் மோசடிக்கு ஆளாகலாம்.