
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதன் பிறகு இணையதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளும் பெரும் அளவில் நடக்கிறது. இதனால் மக்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் நடந்தாலும் மோசடிகளும் அரங்கேதான் செய்கிறது. குறிப்பாக செல்போனுக்கு குறுந்தகவல்கள் அனுப்புவது போலியான மெசேஜ் அனுப்புவது போன்ற பல்வேறு வகைகளில் மோசடி செய்கிறார்கள். இது தொடர்பாக மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுதான் வருகிறது. இருப்பின மோசடிகள் என்பது அரங்கேரி கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் தற்போது பங்குச்சந்தையில் அதிக முதலீடு கிடைக்கும் என்று கூறி மோசடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக தேசிய பங்குச்சந்தை ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. அதாவது இந்தியாவில் பங்குச்சந்தை முதலீட்டில் அதிக லாபம் இருப்பதாக கூறி அணுகுவோரை நம்ப வேண்டாம் என தேசிய பங்குச்சந்தை ஆணையம் எச்சரித்துள்ளது. அதாவது பங்குச்சந்தையில் லாபத்திற்கான உத்திரவாதம் எதுவும் கிடையாது. அதன்பிறகு வாக்குறுதி அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்வது சட்ட விரோதமாகும். அவைகள் எக்சேஞ்ச் நஷ்ட ஈட்டின்கீழ் வருவது கிடையாது. எனவே பங்குச்சந்தையில் அதிக இலாபம் கிடைக்கும் என்று யாராவது உங்களை அணுகினால் அதை நம்பி முதலீடு செய்ய வேண்டாம் என முதலீட்டாளர்களுக்கு தேசிய பங்குச்சந்தை ஆணையம் எச்சரித்துள்ளது.