இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு சார்பில் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த transparent tribe என்ற சைபர் மோசடி கும்பல் இந்தியா தொடர்புடைய நிறுவனங்களின் இணையதளத்தை இலக்காக வைத்து ஹேக் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. Python, Golang போன்ற இணைய மொழிகளை பயன்படுத்தி telegram, கூகுள் டிரைவ் உள்ளிட்ட இணைய சேவையை தவறாக பயன்படுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக மக்களவை தேர்தலில் சைபர் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.