தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக நவம்பர் இரண்டாம் வாரத்தில் பருவமழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத முதலே தமிழ்நாடு, புதுவை உள்ளிட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.