தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அருவிகளில் குளிக்க வேண்டாம் எனவும் மக்களின் செல்போன்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எஸ்எம்எஸ் மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.