தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வருகிற பத்தாம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில் இன்று விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.